உருக்கும் அக்கினி

 

உருக்கும் அக்கினி எரியும் போல

உன்னத ஆவியை ஊற்றுமையா

பர்வதம் மெழுகாய் உருகச்செய்யும்

பரிசுத்த அக்கினி அனுப்புமையா

 

வானங்களை கிழித்திறங்கும்

வல்லமையால் இன்றே இறங்கும்

அக்கினி தண்ணீரை பொங்கச்செய்யும்போல

என்னுள்ளம் உம்நேசத்தால் பொங்கிடச்செய்யும்

 

பாவங்கள் திரளாய் பெருகுதே

பரிசுத்தம் எங்கும் குறையுதே

பாவத்தின் சிந்தையை வேரோடே சுட்டெரிக்கும்

பரிசுத்த அக்கினி  ஊற்றுமையா

 

உலர்த்து போனதே உம்ஜனங்கள்

மீண்டும் உயிரடைய வேண்டுமே

எழுந்து  சேனையாய் ஒன்றிணைந்து நிற்க

அபிஷே அக்கினி  அனுப்புமையா

 

ஆதி அன்பு என்னில் குறையுதே

இருநினைவு பின்னால் இழுக்குதே

கர்த்தரே தேவன் என்றே நான் முழங்க

எழுப்புதல் அக்கினி தாருமையா